

புதுடெல்லி,
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.
எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறும் என்றார்.