அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் வெள்ளி செங்கல் வழங்கப்பட்டது

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் வெள்ளி செங்கல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் வெள்ளி செங்கல் வழங்கப்பட்டது
Published on

சூரத்,

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்த வெள்ளி செங்கல் ஒன்றை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை நேற்று வழங்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com