அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; டிவி நேரலையில் பார்த்த ஒடிசா முதல்-மந்திரி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது .
Image Courtesy: @narendramodi/@PMOIndia/@Naveen_Odisha
Image Courtesy: @narendramodi/@PMOIndia/@Naveen_Odisha
Published on

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது. இதையடுத்து இந்த விழாவை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது இல்லத்தில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்தார்.

அப்போது அவருடன் நபின் ஒடிசா தலைவர் வி.கே.பாண்டியன் உடன் இருந்தார். இது குறித்து நவீன் பட்நாயக் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அயோத்தியில் ராமர் மந்திர் பிரான் பிரதிஷ்டை நடைபெறுவதைக் கண்டேன். பிரான் பிரதிஷ்டைக்காக மத ஆர்வத்துடன் தேசம் ஒன்றிணைவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com