அயோத்தி வழக்கு: பா.ஜனதா ஆட்சியில் இருந்ததால்தான் சாதகமான தீர்ப்பு கிடைத்தது - குஜராத் எம்.பி. பேச்சு

பா.ஜனதா ஆட்சியில் இருந்ததால்தான் அயோத்தி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததாக குஜராத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கு: பா.ஜனதா ஆட்சியில் இருந்ததால்தான் சாதகமான தீர்ப்பு கிடைத்தது - குஜராத் எம்.பி. பேச்சு
Published on

பரூச்,

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் அந்த தொகுதி பா.ஜனதா எம்.பி. மான்சுக் வாசவா தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ராமஜென்ம பூமி பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவருகிறது. மத்தியில் பா.ஜனதா அரசு இருந்ததால்தான் சுப்ரீம் கோர்ட்டு நமக்கு சாதமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார்.

அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பரூச் காங்கிரஸ் தலைவர் பரிமள்சிங் ராணா கூறும்போது, வாசவா மதரீதியான பதற்றத்தை தூண்ட முயற்சிக்கிறார். இதை நாங்கள் கண்டிப்பதுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

பின்னர் வாசவா எம்.பி., உத்தரபிரதேசத்திலும், மத்தியிலும் பா.ஜனதா ஆட்சியில் இருந்ததால்தான் தீர்ப்புக்கு பின்னர் எந்த வன்முறையும் நடைபெறவில்லை என்றுதான் கூறினேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com