ஆயுர்வேதம் இந்தியாவின் பழமையான பாரம்பரியம் - மத்திய மந்திரி அர்ஜூன் முண்டா

ஆயுர்வேதம் இந்தியாவின் பழமையான பாரம்பரியமாக விளங்குவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா தெரிவித்தார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற 7-வது ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "இந்தியாவின் பழமையான பாரம்பரியமாகவும், செல்வமாகவும் ஆயுர்வேதம் விளங்குகிறது. காடுகளில் வாழும் மக்களுடன் இணைந்து ஆயுர்வேதத்தை வளர்த்தெடுக்கலாம்.

ஆயுர்வேதம் மட்டுமே நேயைத் தடுப்பதை பற்றிய மருத்துவ விஞ்ஞானமாகும். மாறாக அது நேய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதற்கான அறிவியல் அல்ல." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால், "ஆயுர்வேதம் என்பது நோயை தடுக்கும் பழமையான பாரம்பரிய அறிவாகும் .எனவே, அந்த துறையில் கவனிக்கத்தக்க வகையிலான பல்வேறு ஆய்வுகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன. "இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com