பேராசிரியர் உடன் தொடர்பு இருப்பதாக கூறியதால் ஆயுர்வேத மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு

நிகிதா பாடம் தொடர்பான சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர் ராஜுவிடம் கேட்டு வந்தார்.
பேராசிரியர் உடன் தொடர்பு இருப்பதாக கூறியதால் ஆயுர்வேத மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே பகுதி யில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி யில் மல்லாடிஹள்ளியை சேர்ந்த நிகிதா (வயது 23) என்பவர் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பாடம் தொடர்பான சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர் ராஜுவிடம் கேட்டு வந்தார்.

இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பேராசிரி யர் ராஜுக்கும், நிகிதாவுக்கும் தொடர்பு உள்ளது என பேசி வந்தனர். இதனால் மனமுடைந்த நிகிதா, மாணவ-மாணவிக ளிடம் அதுபோன்று எதுவும் எங்களுக்குள் கிடையாது என நிகிதா தெரிவித்தார். ஆனாலும் அவர்கள் நம்பவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த நிகிதா வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒலல்கெரே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் உயிரிழந்த நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நிகிதா கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், பேராசிரியர் ராஜுவையும், என்னையும் (நிகிதா கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள், ராஜு வின் மனைவி ஆகியோர் தொடர்புபடுத்தி பேசியதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என இருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஒலல்கெரே போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com