75 லட்சம் பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம்: மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு

பொங்கல் திருநாளில் 75 லட்சம் பேர் பங்கேற்கும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, வருகிற 14-ந் தேதி, உலகளாவிய பிரமாண்டமான சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 75 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லா உயிர்களையும் காக்கும் சூரிய கதிர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக சூரிய நமஸ்காரம் நடத்தப்படுகிறது. மேலும், சூரிய நமஸ்காரம், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. சூரிய ஒளி படுவதால் நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. மேலும், பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வுக்காகவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சூரிய மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம், கார்பன் உமிழ்தலை குறைத்து புவி வெப்பமயமாவதை தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com