கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைத்த தமிழக ஐயப்ப பக்தர்கள்

குழந்தைகள், வயதான பெண்களுக்கு சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும் எனவும், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு தண்ணீர், உணவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைத்த தமிழக ஐயப்ப பக்தர்கள்
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கோரி கேரள ஐகோர்ட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.

அதில், நிலக்கல் முதல் பம்பை வரை பக்தர்களை போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் ஏற்ற வேண்டும் என்றும், ஒரு பேருந்தில் 80 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேலும் குழந்தைகள், வயதான பெண்களுக்கு சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும் எனவும், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு தண்ணீர், உணவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவிர, சுகாதாரமான உணவு தயாரிப்பை உறுதி செய்யவும், மருத்துவ வசதியை அதிகரிக்கவும் மின்னஞ்சல் மூலமாக தமிழக ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com