எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி

மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி
Published on

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடம் புறக்கணிக்கவில்லை. அவருக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரது பெயரை கூறிக்கொண்டு அரசியல் செய்வதை தவிர்க்க முடியாது. தொண்டர் படையுடன் அரசியல் செய்து அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைப்போம். மக்கள் ஆசி யாத்திரையில் கூட்டம் கூட்டியது தவறு தான். ஆனால் அந்த யாத்திரையால் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆன்மிக விஷயத்தை முன்வைத்து அரசின் விதிமுறைகளை மீறுவது சரியாக இருக்காது. பா.ஜனதா தொண்டர்கள் கட்சி. ஒரு தலைவரை மையப்படுத்தி செயல்படும் கட்சி அல்ல. இதுவரை கூட்டு தலைமையின் கீழ் தான் பா.ஜனதா தேர்தலை சந்தித்து வந்துள்ளது.

இவ்வாறு ஏ.நாராயணசாமி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com