பிரிஜ் பூஷனை சிறைக்கு அனுப்ப வேண்டும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு

மே 28ஆம் தேதி நடைபெற உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா அன்று அதன் முன்பு போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
பிரிஜ் பூஷனை சிறைக்கு அனுப்ப வேண்டும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு
Published on

ஜெய்ப்பூர்

பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக போராட நாடு முழுவதும் ஆதரவு திரட்ட மல்யுத்த வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் அரியானா மாநிலம் ஜின்ட் சென்றடைந்தார், சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் காடியன் ஆகியோர் பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னதாக அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் திரண்டு பெரிய அளவில் தர்ணா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கிடையில், சங்கீதா போகட் மற்றும் வினேஷ் போகட் ஜந்தர் மந்தரில் தங்கள் தீட்சையைத் தொடர்கின்றனர்.

மே 28ஆம் தேதி நடைபெற உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா அன்று அதன் முன்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர்.

இந்த் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், மல்யுத்த வீரர்கள் மல்யுத்த சங்கத்தின் தலைவர் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுவது வெட்கக்கேடான விஷயம் ரிஜ் பூஷன் சரண் சிங்கின் பெயரைக் குறிப்பிடாமல் பாபா ராம்தேவ், அத்தகைய நபரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com