அயோத்தியில் மசூதியை பாபர் கட்டினார் - சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் புத்தகம் மூலம் ஆதாரம் தாக்கல்

அயோத்தியில் மசூதியை பாபர் கட்டினார் என சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் புத்தகம் மூலம் ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.
அயோத்தியில் மசூதியை பாபர் கட்டினார் - சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் புத்தகம் மூலம் ஆதாரம் தாக்கல்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறது. இதில் நேற்று முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவன் தனது வாதத்தில், பாபர் பற்றிய பாபர்நாமா என்ற புத்தகத்தில் அயோத்தியில் பாபர் மசூதியை கட்டியதாக கூறப்பட்டுள்ளது என்றார்.

அதுதொடர்பாக அந்த கட்டிடத்தில் அரபிக் மற்றும் பெர்சியன் மொழிகளில் எழுதப்பட்டிருந்த சில பதிவுகளையும் அவர் கோர்ட்டில் காண்பித்தார். மக்களிடம் உள்ள நம்பிக்கை தான் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் பலனடையும் வகையில் கோர்ட்டு ஒரு தீர்வு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் ராஜீவ் தவன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com