

ராஜமகேந்திரவரம்,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மணி என்ற 25 வயது பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. .
இது மிகவும் அரிதான ஒன்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவவர்கள் தெரிவித்தனர். நான்கு கால்களுடன் பிறந்துள்ள குழந்தையை காண மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.