கழிவுநீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை: 7 மணி நேரம் போராடி மீட்பு

கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கிய குட்டி யானையால் அதிலிருந்து தானாக வெளியேற முடியாமல் தவித்து வந்தது.
 கழிவுநீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை: 7 மணி நேரம் போராடி மீட்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த குட்டி யானையை 7 மணி நேரம் போராடி வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டிக்குள், ஆறு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கிய குட்டி யானையால் அதிலிருந்து தானாக வெளியேற முடியாமல் தவித்து வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் உதவியுடன் குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com