அட்டப்பாடி வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை மீட்பு

அட்டப்பாடி வனத்துறையினருடன் சேர்ந்து பழங்குடியின மக்களும் குட்டி யானையை பராமரித்து வருகின்றனர்
 
அட்டப்பாடி வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை மீட்பு
Published on

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்த அப்பன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள நீரோடையில் உள்ள கற்களுக்கு இடையே குட்டி யானை சிக்கி தவித்தது. இதை வனத்துறையினர் பார்த்த போது, பிறந்து சில மணி நேரமே ஆனது தெரியவந்தது.

அதன் தாய் யானை குட்டியை ஈன்று விட்டு, வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு தாய் யானையுடன் சேர்க்க, அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். '

மேலும் மீட்கப்பட்ட குட்டி யானைக்கு டாக்டர் ஆலோசனைப் படி, இளநீர் மற்றும் மருந்துகள் வழங்கி பராமரித்து வருகிறார் கள். அட்டப்பாடி வனத்துறையினருடன் சேர்ந்து பழங்குடியின மக்களும் குட்டி யானையை பராமரித்து வருகின்றனர். அதற்கு விஷ்ணு என பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்து றையினர் கூறும்போது, குட்டி யானையை பராமரிக்க வனப்ப குதியில் தற்காலிகமாக குடில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு பிறகும் தாய் யானை வரவில்லையென்றால், குட்டி யானை பராமரிப்பு மையம் கொண்டு செல்லப்படும்” என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com