மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதம்

டெல்லியில் தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்(IGIA) நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்படுகின்றன.
இந்த நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையுடன், பலத்த காற்று வீசியது. இதனிடையே, மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. வானிலை சீரான பிறகு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
Related Tags :
Next Story






