கடையில் ‘பாகிஸ்தானை விரும்புகின்றேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள்! இருவர் கைது

கான்பூர் கடையில் பாகிஸ்தானை விரும்புகின்றேன் என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடையில் ‘பாகிஸ்தானை விரும்புகின்றேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள்! இருவர் கைது
Published on

கான்பூர்,

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடையில் நான் பாகிஸ்தானை விரும்புகின்றேன் என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிந்த் நகர் பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது நான் பாகிஸ்தானை விரும்புகின்றேன் என்ற வாசகம் அடங்கிய பலூன் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்து உள்ளதாக போலீஸ் தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. விசாரணையில் இருவரும் பலூன்கள் டெல்லியின் சாதார் பஜாரில் இருந்து வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து டெல்லி மார்க்கெட்டிற்கு மேற்கொண்டு விசாரணை நடத்த உ.பி. போலீஸ் சென்று உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com