ஏழைகள் மது குடிப்பதை தடை செய்க : ஆந்திர எம் பி யோசனை

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று பேசிய ஆந்திர மாநில உறுப்பினரான கீதா (ஒய் எஸ் ஆர் கட்சி) ஏழைகள் மது குடிப்பதை தடை செய்ய வேண்டும்; அவர்களின் மது அருந்தும் பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறினார்.
ஏழைகள் மது குடிப்பதை தடை செய்க : ஆந்திர எம் பி யோசனை
Published on

புது டெல்லி

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று பேசிய ஆந்திர மாநில உறுப்பினரான கீதா (ஒய் எஸ் ஆர் கட்சி) ஏழைகள் மது குடிப்பதை தடை செய்ய வேண்டும்; அவர்களின் மது அருந்தும் பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறினார்.

மதுப் பழக்கம் அனைவரது கவனத்தையும் ஈர்க்ககூடிய விஷயமாகும். அதன் மூலம் ஏற்படும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் கீதா. கேள்வி நேரத்தில் அவர் பேசும் போது, நாடு முழுவதும் ஏழை மக்கள் மது குடிப்பது தடை செய்யப்பட வேண்டும். ஏழை மக்களின் மது குடிக்கும் பழக்கத்தால் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பல மாநிலங்கள் மதுவை தடைச் செய்துள்ளன; ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டும் மது குடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது மதுக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com