பி.எப்.ஐ அமைப்பு மீதான தடையை ஆதரிக்க முடியாது- அசாதுதீன் ஓவைசி

பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

புதுடெல்லி,

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சில நபர்கள் செய்த குற்றங்களுக்காக ஒரு அமைப்பைக் குறை கூறக் கூடாது என ஓவைசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், " நான் எப்போதும் பி.எப்.ஐ-யின் அணுகுமுறையை எதிர்த்து, ஜனநாயக அணுகுமுறையை ஆதரித்து உள்ளேன். இருப்பினும் பி.எப்.ஐ மீதான இந்த தடையை ஆதரிக்க முடியாது.

குற்றம் செய்யும் சில நபர்களின் செயல்களால் அந்த அமைப்பையே தடை செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒருவரைக் குற்றவாளியாக்க ஒரு அமைப்போடு தொடர்பு கொள்வது மட்டும் போதாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது

ஆனால் இந்த வகையான கடுமையான தடை ஆபத்தானது. ஏனெனில் இந்த தடை தனது கருத்தை சொல்ல விரும்பும் இஸ்லாமியர் மீதான தடையாகும். காஜா அஜ்மேரி குண்டுவெடிப்புக் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அமைப்புகள் செயல்பட்டு வரும் போது பி.எப்.ஐ அமைப்பு மட்டும் ஏன் தடை செய்யப்பட்டது. வலதுசாரி பெரும்பான்மை அமைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்யவில்லை?" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com