குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்பு

குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்க உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய குடியரசு தினத்தையொட்டி வருகிற 26-ந் தேதி டெல்லியில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. வங்காளதேசம் விடுதலை பெற்ற 50-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது.

அந்த நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள். இந்த அணிவகுப்பில் வங்காளதேச ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்பார்கள்.

இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் 3-வது வெளிநாட்டு ராணுவம் வங்காளதேசத்தினுடையது ஆகும். ஏற்கனவே பிரான்ஸ் (2016), அமீரக (2017) நாடுகளின் படைகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com