கைதாகி சிறையில் உள்ள வங்காளதேசத்தினர் 12 பேரின் ஆவணங்களை என்.ஐ.ஏ.வுக்கு வழங்க வேண்டும்; ஆதார் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கைதாகி சிறையில் உள்ள வங்காளதேசத்தினர் 12 பேரின் ஆவணங்களை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கும்படி ஆதார் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கைதாகி சிறையில் உள்ள வங்காளதேசத்தினர் 12 பேரின் ஆவணங்களை என்.ஐ.ஏ.வுக்கு வழங்க வேண்டும்; ஆதார் ஆணையத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு:

12 பேர் கைது

சட்டவிரோத செயல்களை மேற்கொண்டதாக கூறி வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்து மத்திய அரசு வழங்கும் ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை வழங்குமாறு கோரி ஆதார் ஆணையத்திற்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கேட்டது.

ஆனால் ஆதார் ஆணைய சட்டப்படி அந்த ஆவணங்களை வழங்க முடியாது என்று கூறி ஆதார் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி என்.ஐ.ஏ.வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. மனு தாக்கல் செய்து, விசாரணை நடத்துவதற்காக கைதான வங்காளதேசத்தினர் 12 பேரின் ஆவணங்களை வழங்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரியது. இந்த மனு மீது ஐகோட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

சரியானது தான்

இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, கைதாகி சிறையில் உள்ள வங்காளதேசத்தினர் 12 பேர்களும் ஆதார் அட்டை பெறுவதற்காக கொடுத்த ஆவணங்களை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கும்படி ஆதார் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். 2 வாரத்திற்குள் ஆவணங்களை பார்த்து கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

"அவர்கள் தவறான, மோசடி வழியில் ஆவணங்களை தாக்கல் செய்து ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அதனால் அந்த ஆவணங்களை என்.ஐ.வுக்கு வழங்குவது சரியானது தான்" என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com