செல்போன் திருடனை பிடிக்க முயன்றபோது ரெயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி

ரெயிலின் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது அருகில் நின்ற இளைஞர், செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புனே,

புனேயை சேர்ந்த தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தவர் பிரபாஸ் (வயது24). சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மும்பை வந்திருந்தார். இதன்பின்னர் சம்பவத்தன்று புனே செல்ல சித்தேஷ்வர் ரெயிலில் பயணம் செய்தார்.

அப்போது அவர் வாசல் அருகே நின்றபடி செல்போன் பேசிக்கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. ரெயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரெயில் நிலையம் அருகே மெதுவாக சென்ற போது, அவர் அருகே நின்ற ஆகாஷ் ஜாதவ் (27) என்ற வாலிபர் திடீரென அவரிடம் செல்போனை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

இதனை கண்ட பிரபாஸ் செல்போன் திருடனை பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்தார். அப்போது ரெயிலில் சிக்கிய பிரபாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடன் ஆகாஷ் ஜாதவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அம்பிவிலி ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com