

ஐதராபாத்,
வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு என்பது 9 வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு ஆகும்.
சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதை கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக தர்ணா, பேரணி போன்றவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.