

புதுடெல்லி
ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும்.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கி விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த இடங்களைத் தவிர, 2021 ஜனவரி 1ம் தேதி வங்கிகள் மற்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் செயல்படும். ஐஸ்வாலில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 2ம் தேதி வங்கிகள் மூடப்படும், அதே சமயம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் காரணமாக கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் ஜனவரி 12ம் தேதி செயல்படாது. மஹர சங்கராந்தி காரணமாக அகமதாபாத், காங்டாக் மற்றும் ஐதராபாத் வங்கிகள் ஜனவரி 14ம் தேதி மூடப்படும், அதே நேரத்தில் சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் மூடப்படும். மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் வங்கிகள் மூடப்படும்.
ரிசர்வ் வங்கியின் படி ஜனவரி 2021க்கான விடுமுறை நாட்களின் முழு பட்டியல் விவரம் வருமாறு:-
1 ஜனவரி 2021- புத்தாண்டு தினம்
2 ஜனவரி 2021 -புதிய ஆண்டு கொண்டாட்டம்
3 ஜனவரி 2021- ஞாயிறு9 ஜனவரி 2021- இரண்டாவது சனிக்கிழமை
10 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)
12 ஜனவரி 2021 - சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்
14 ஜனவரி 2021 - மகர சங்கராந்தி / பொங்கல் / மாகே சங்கராந்தி
15 ஜனவரி 2021 - திருவள்ளுவர் நாள் / மாக் பிஹு மற்றும் துசு பூஜை
16 ஜனவரி 2021 - உழவர் திருநாள்
17 ஜனவரி 2021- ஞாயிறு
20 ஜனவரி 2021 - குரு கோவிந்த் சிங் ஜி பிறந்த நாள்
23 ஜனவரி 2021- நான்காம் சனிக்கிழமை, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள்
24 ஜனவரி 2021- ஞாயிறு
25 ஜனவரி 2021- இமோயினு இரத்பா
26 ஜனவரி 2021- குடியரசு தினம்
31 ஜனவரி 2021- ஞாயிறு
மேற்கூறிய தேதிகளைத் தவிர, பின்வரும் தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்:
திருவள்ளுவர் தினம், மாக் பிஹு மற்றும் டுசு பூஜை (Tusu Puja) காரணமாக ஹைதராபாத்தில் ஜனவரி 15ம் தேதி வங்கிகள் செயல்படாது.
குரு கோவிந்த் சிங் ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகரில் ஜனவரி 20ம் தேதி வங்கிகள் செயல்படாது.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு அகர்தலாவில் ஜனவரி 23ம் தேதி வங்கிகள் செயல்படாது.
இமோயினு இரத்பா காரணமாக இம்பாலில் ஜனவரி 25ம் தேதி வங்கிகள் செயல்படாது.
இந்த தேதிகளில் வங்கிகள் மூடப்படும் அதே வேளையில், மொபைல் மற்றும் இணைய வங்கி (Mobile and Internet Banking) செயல்படும்.
இந்த விடுமுறை நாட்களில் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்பதால், ஏடிஎம்களில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.