

புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.18.08லட்சம் கோடி மதிப்பிலான கடன்களைத்தள்ளுபடிசெய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும்கடன் தள்ளுபடி 8.2 சதவீதம் குறைந்து ரூ.1.44 லட்சம் கோடியாக உள்ளது. இருப்பினும், வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வாராக்கடன்களின் ஒட்டுமொத்த அளவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து வணிக வங்கிகளின் மொத்த தள்ளுபடியில் சுமார் 65 சதவீதத்தை, அதாவது ரூ.11.73 லட்சம் கோடியை முதல் 10 வங்கி கள் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பே அதிகமாக உள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்களின் பணத்தை வசூலிப்பதில் உள்ள பொறுப்புக்கூறல் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாராக்கடன்களைக் குறைப்பதற்காக வங்கிகள் இந்தத் தள்ளுபடி முறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், பெரிய கடன் வாங்கியவர்களுக்கே இந்த நடைமுறை அதிக பலன் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். மேலும். சிறிய கடன்கள் அரிதாகவே தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அந்ததொகையில் பெரும்பகுதி பெரிய கடன்களாகவே இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.