கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்


கன்னடத்தில் பேச மறுத்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட வங்கி மேலாளர்
x

வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெங்களூரு நகருக்கு உட்பட்ட சூரியா நகர் எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுப்பு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர் வேண்டுகோளாக கேட்டு கொண்டபோதும் அவர் கன்னடத்தில் பேசவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

இந்நிலையில், கன்னடம் பேச மறுத்து விமர்சனத்திற்கு ஆளான எஸ்.பி.ஐ. கிளை மேலாளர், மன்னிப்பு கேட்டுள்ளார். இனி முடிந்தவரை கன்னடத்தில் பேச முயற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது வேறு கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறு மாதங்களில் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கன்னட அபிவிருத்தி ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story