வங்கிகள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
வங்கிகள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு
Published on

புதுடெல்லி,

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் (30, 31-ந் தேதிகள்) வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டு சதவீத ஊதிய உயர்வை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள் சார்பில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 21-பொதுத்துறை வங்கிகள், 13-தனியார் துறை வங்கிகள், 6-வெளிநாட்டு வங்கிகள் மற்றும் 56-பிராந்திய கிராமப்புற வங்கிகளின் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் கேரளா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

மேலும் வங்கி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com