21-ந் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம்: 24-ந் தேதி தவிர 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

21-ந் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடத்த உள்ளன. அதில் 24-ந் தேதி தவிர மற்ற 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
21-ந் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம்: 24-ந் தேதி தவிர 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது
Published on

ஐதராபாத்,

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com