கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல்

கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல் கூறினார்.
கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல்
Published on

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன், கடந்த 26-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று கொலையான பிரவீனின் வீட்டுக்கு நேரில் சென்றார். பின்னர் அவர், பிரவீனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அரசு சார்பில் பிரவீனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் வந்த பசவராஜ் பொம்மை, மங்களூரு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com