பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை; மந்திரி பி.சி.நாகேஸ் சொல்கிறார்

பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை; மந்திரி பி.சி.நாகேஸ் சொல்கிறார்
Published on

பெங்களூரு:

பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

பயங்கரவாதியுடன் மாணவரின்...

உடுப்பி மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவரின் பெயர் கேட்டுள்ளார். அந்த மாணவர் தனது பெயரை கூறினார். தனது பெயரை கூறியதும், அதை பயங்கரவாதி கசாப்பின் பெயருடன் ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதற்கு கடும் ஆட்சேபனை எழுந்தது. இதையடுத்து அந்த உதவி பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

மாணவரின் பெயரை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டது துரதிர்ஷ்டம். இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. ஆசிரியர் பயங்கரவாதியின் பெயரை பயன்படுத்தி இருக்க கூடாது. ஆனால், இது ஒரு தீவிரமான விஷயம் என்று நான் கருதவில்லை.

சகுனியின் பெயர்

ஏனென்றால் ராவணன் பெயரை நாம் பல முறை பல மாணவர்களுடன் ஒப்பிட்டு சொல்கிறோம். சகுனியின் பெயரையும் ஒப்பிடுகிறோம். ஆனால் அது ஒரு பிரச்சினையாக கருதப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெயரை பயன்படுத்தும்போது மட்டும் பிரச்சினை ஆவது ஏன் என்று தெரியவில்லை.

இவ்வாறு மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராவணனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com