கணவர் கண்டித்ததால் புதுப்பெண் தற்கொலை

கணவர் கண்டித்ததால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கணவர் கண்டித்ததால் புதுப்பெண் தற்கொலை
Published on

பீதர்: பீதர் மாவட்டம் பால்கி தாலுகா பீபீவி கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 20). இவருக்கும் பீதர் தாலுகா ரேகுலகி கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் அம்பிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை லோகேஷ் கண்டித்து உள்ளார்.

இதனால் மனம் உடைந்த அம்பிகா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பீதர் புறநகர் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை லோகேசும், அவரது குடும்பத்தினரும் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக அம்பிகாவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com