ரெயில் உள்ள ஏ.சி. பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு... இத்தனை கோடி இழப்பா...?

பேஸ் டவல்கள் தான் பயணிகள் அதிகம் எடுத்துச்செல்லும் பொருளாக உள்ளது.
ரெயில் உள்ள ஏ.சி. பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு... இத்தனை கோடி இழப்பா...?
Published on

புதுடெல்லி,

ஏ.சி.கோச்

இந்திய ரெயில்வேயின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் (ஏ.சி.கோச்) பயணிக்கும் பயணிகளுக்கு 1 போர்வை, 1 தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைக்க ஒரு துண்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இவைகளை எல்லாம் வடமாநில பயணிகள் சிலர், ரெயில் நிலையத்தை விட்டு இறங்கும்போது, தங்கள் உடைமைகளுடன் சேர்த்து கையோடு எடுத்து சென்றுவிடுகிறார்கள்.

ரெயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு போன்ற அனைத்து பொருட்களும், அதே எண்ணிக்கையில் உள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும் என்று ரெயில்வே ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி ரெயில்வே ஊழியர்களும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படுக்கை விரிப்புகள் திருட்டு

இந்த நிலையில், வடமாநிலத்தில் உள்ள 10 ரெயில்வே மண்டலங்களில் பயணிக்கும் ரெயில்களில் ஏசி படுக்கைகளில் வழங்கப்படும் போர்வைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணைகள் திருடப்பட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது. 2022 ஜனவரி முதல் 2026 மே வரையிலான காலகட்டத்தில் இந்த திருட்டு சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளன. இதில், பேஸ் டவல்கள் தான் பயணிகள் அதிகம் எடுத்துச்செல்லும் பொருளாக உள்ளது.

சில பகுதிகளில் தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் கூட அதிகளவில் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 4 ஆண்டுகளில் சுமார் 1.27 கோடி படுக்கை படுக்கை விரிப்பு உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில் பயணிகளே படுக்கை விரிப்புகள், தலையணைகளை திருடுவதாகத் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எந்த கோட்டம் முதலிடம்?

இந்த திருட்டு பட்டியலில் ராஜஸ்தானின் பிகானேர் கோட்டம் 25.76 லட்சம் திருடப்பட்ட பொருட்களுடன் முதலிடத்திலும், ஜார்க்கண்டின் ராஞ்சி கோட்டம் 9.31 லட்சம் பொருட்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெல்லி (8.21 லட்சம்), மும்பை(8.17 லட்சம்), ஜோத்பூர்(8.09 லட்சம்), மற்றும் அகமதாபாத் (6.94 லட்சம்) ஆகிய கோட்டங்கள் அதிக இழப்பை சந்தித்துள்ளன.

முகத் துண்டுகள்: 46.54 லட்சம்

படுக்கை விரிப்புகள்: 41.13 லட்சம்

தலையணை உறைகள்: 23.59 லட்சம்

போர்வைகள்: 12.95 லட்சம்

தலையணைகள்): 2.76 லட்சம்

X

Daily Thanthi
www.dailythanthi.com