

கொல்கத்தா,
மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை சோதனை, பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் இருந்தது. அதை 50 கி.மீ. தூரம் வரை நீட்டித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி, இதற்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த அதிகாரம், கூட்டாட்சி முறை மீதான நேரடி தாக்குதல் என்று அவர் கூறினார். தீர்மானத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக 112 ஓட்டுகளும், எதிராக 63 ஓட்டுகளும் கிடைத்ததால், தீர்மானம் நிறைவேறியது.