மேற்குவங்காளம்: பாஜகவில் இணைந்த பிரபல நடிகை...!

மேற்குவங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகை ருக்மினி மல்லிக்.
மேற்குவங்காளம்: பாஜகவில் இணைந்த பிரபல நடிகை...!
Published on: 

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகை ருக்மினி மல்லிக் பாஜகவில் இணைந்தார்.

பிரபல நடிகை

மேற்குவங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகை ருக்மினி மல்லிக். இவர் பழம்பெரும் வங்காள நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகள் ஆவார். அதேவேளை, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக செயல்பட்டு வந்த ருக்மினி மல்லிக் சட்டசபை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து கட்சியில் இருந்து விலகினார்.

பாஜகவில் இணைந்தார்..!

இந்நிலையில், ருக்மினி மல்லிக் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட உள்ளார். 12 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மேற்குவங்காளத்தில் ருக்மினி மல்லிக் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிபார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com