மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று: 2,153 பேர் குணமடைந்தனர்

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று புதிதாக 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,41,624 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மேற்கு வங்காளத்தில் இன்று 34 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,473 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 5,16,462 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 15,689 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com