பெங்களூரு: குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம்

குடிநீரை வீணாக்குவோர் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு: குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிக்கு குடிநீரை பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திரும்ப திரும்ப செய்து கொண்டே இருந்தால் கூடுதலாக ரூ.500 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூருவில் குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிநீரை வீணாக்குபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் குடிநீரை வீணாக்குவோர் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு பெங்களூருவில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீரை வீணடிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com