பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்


பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
x

கிரேன் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சில்க் போர்டில் இருந்து சர்வதேச விமான நிலையம் இடையே நீல நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் அகரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் மூலம் இரும்பு கார்டரை தூக்கும் பணி நடந்தது.

100 டன் எடையிலான இரும்பு கார்டரை தூக்கும்போது கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 ஜாக்குகளில் ஒரு ஜாக் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த ராட்சத கிரேன் திடீரென கவிழ்ந்து விழுந்தது. இதில் கிரேன் வாகனத்தின் முன்பகுதி மேலே தூக்கியது.

உடனே கிரேன் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த கிரேன் 500 டன் எடை தூக்கும் திறன் கொண்டதாகவும், ஜாக் துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் என்ஜினீயர் தெரிவித்துள்ளார். மேலும் எச்.எஸ்.ஆர். போக்குவரத்து போலீசாரும் அங்கு சென்று பார்வையிட்டனர்.

1 More update

Next Story