கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட்டு தடை


கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட்டு தடை
x

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

தக்லைஃப் பட விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என பேசியிருந்தார். கமல்ஹாசனினின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தக்லைப் படத்தை திரையிடவும் எதிர்ப்புகள் கிளம்பின . கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். கர்நாடகத்தில் கமலின் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகள் கொளுத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே மல்ஹாசன் மீது பெங்களூரு கோர்ட்டில் கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு, கன்னட மொழி, கலசாரம், நிலம், இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட கோர்ட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

1 More update

Next Story