மரக்கிளை முறிந்து விழுந்து ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உயிரிழப்பு


மரக்கிளை முறிந்து விழுந்து ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உயிரிழப்பு
x

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹனுமந்த் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அக்ஷய் சீனிவாசன் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். அதிகாரியாக (மனிதவளத்துறை - HR) பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கடந்த 15ம் தேதி அக்ஷய் தனது ஸ்கூட்டரில் பிரம்ம சைத்தன்யா கோவில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிக காற்று காரணமாக காய்ந்த மரக்கிளை முறிந்து ஸ்கூட்டரில் சென்ற அக்ஷய் தலையில் விழுந்தது. ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய அக்ஷய் தலையில் மரக்கிளை முறிந்து விழுந்த நிலையில் அவர் நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு ஜெயாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் அனுமதித்தனர். அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஹெல்மெட் அணியாததால் மரக்கிளை விழுந்ததில் அவரது தலையில் 12 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அக்ஷய் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story