"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." எந்நேரமும் தூங்கும் மனைவி : அனைத்து வீட்டு வேலைகளும் தாமே செய்வதாக போலீசாரிடம் புகார் அளித்த கணவர்...!

பெங்களூருவில் தனது மனைவி எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதால் வீட்டு வேலைகளை தாமே செய்வதாக போலீஸ் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழந்துள்ளது.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." எந்நேரமும் தூங்கும் மனைவி : அனைத்து வீட்டு வேலைகளும் தாமே செய்வதாக போலீசாரிடம் புகார் அளித்த கணவர்...!
Published on

பெங்களூரு,

பெங்களூரு போலீசார் ஒரு வினோதமான புகாரை ஒன்று பெற்றுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த இம்ரான்கான். இவர் தனியார் நிறுவனத்தில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஆயிஷா. இவர் மனைவி மீது புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவி எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதால் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தாமே செய்வதாக புகார் அளித்தார். இம்ரான் கான் தனது மனைவி ஆயிஷா தன்னையோ அல்லது பெற்றோரையோ சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும், அவர் தூங்குவதையே குறிக்கோளாக கொண்டு தூங்குகிறார். மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரைக்கும் தூங்கிய பிறகு இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் தூங்கி அடுத்த நாள் மதியம் 12.30 மணி க்கு தான் எழுவதாக புகார் அளித்துள்ளார். இது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இம்ரான்கான் தனது மனைவி சரியாக சமையல் கூட செய்வதில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். அனைத்து சமையல் வேலைகளையும் எனது தாயை சொல்லிவிட்டு தூங்கி விடுகிறாள். தனது மனைவியிடம் வீட்டு வேலை செய்யும்படி கேட்கும்போதெல்லாம் அவர் சண்டை போட்டு விட்டு பெற்றோரின் வீட்டிற்குச் செல்வது வழக்கமாகி கொண்டு விட்டாள். மனைவிக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், திருமணத்தின் போது தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதனை மறைத்து விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இம்ரான்கானின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதால் மனைவி மீதே கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com