தாயை பராமரிப்பதற்காக ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்: குவியும் பாராட்டு

தாயை வீட்டில் தனியாக விட்டு செல்வது கடினமாக இருந்ததாக இளம்பெண் கூறினார்.
தாயை பராமரிப்பதற்காக ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்: குவியும் பாராட்டு
Published on: 

பெங்களூரு,

தந்தையை இழந்த நிலையில் தாயை பராமரிப்பதற்காக ஐ.டி. வேலையை உதறிவிட்டு இளம்பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ ஓட்டும் இளம்பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண், அதிக சம்பளம் தரும் மதிப்பு மிக்க ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வருகிறார். சமூக வலைதள பிரபலமான ஒரு பெண், சமீபத்தில் ஆட் டோவை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். அப்போது ஆட்டோ ஒட்டிய இளம்பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசியதால் கண்டு ஆச்சரியமடைந்த அவர், ஆட்டோ ஓட்டிய இளம்பெண்ணிடம் அவரது பின்னணி குறித்து கேட்டார்.

வேலையை உதறிவிட்டு...

அப்போது அந்த இளம்பெண், முன்பு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், தந்தையின் இறப்பிற்கு பிறகு தாய் தனிமையில் இருந்து வந்ததாகவும், ஐ.டி.யில் இரவு பணி காரணமாக இரவில் தாயை வீட்டில் தனியாக விட்டு செல்வது கடினமாக இருந்ததாகவும், தாயை பராமரிப்பதற் காக ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், தொடக்கத்தில் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் முடிவுக்கு வந்த போது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நன்கு படித்த ஒரு பெண் ஆட்டோ முடியுமா? மக்கள் என்ன நினைப்பார்கள்? என கேட்டனர். ஆனால் அதுபற்றி எதையும் கேட்காமல், இந்த பாதையை தேர்ந்தெடுத்தேன்.

பாராட்டு

இது கார்ப்பரேட் வேலையை விட சிறந்தது. என் அம்மாவுடன் நேரம் செலவிட முடிகிறது. ஐ.டி.யில் சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதிக்கிறேன் என பெரு மையுடன் தெரிவித்தார். இதனை சமூக வலைதள பிரபலமான அந்த பெண், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி மில்லியன் கணக்கான பார்வையை பெற்றதுடன் இணையவாசிகள் பலரும், சமூக விதிகளை மீறி ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்து கொண்ட அந்த இளம்பெண்ணின் தைரியத்தையும், தன் தாயின் மீதான அன்பையும் பாராட்டி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com