பெங்களூரு : ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் இளம்பெண்

ஐ.டி. நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்.
educated former IT worker auto-drive
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐ.டி. நிறுவனம் ஒன்றில் 9 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். தற்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் மனித உழைப்பை குறைத்து, ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

ஆட்களை குறைத்து வருகிறது

இதனால் வாடிக்கையாளர் சேவை, தரவு உள்ளீடு, மற்றும் எளிய கோடிங் போன்ற வேலைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களினால் ஆட்களை குறைத்து வருகிறது.

மன உளைச்சல்

இந்த நிலையில் பல வருடங்களாக நல்ல பதவியில் பெரிய நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் ஓய்வற்ற வேலை நேரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையில் மன மன உளைச்சலாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தார்.

ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.60 ஆயிரம்

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தேடலில்தான், யாரும் எதிர்பாராத ஒரு முடிவை அவர் எடுத்திருக்கிறார். அவர் அந்த ஐ.டி., நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆட்டோ ஓட்டி மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com