இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம்: பிரதமர் மோடி


இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே  சிறந்த தருணம்: பிரதமர் மோடி
x

முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

ஆசியாவின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்பக் கண்காட்சியாக இந்திய மொபைல் காங்கிரஸ் கண்காட்சி உள்ளது. இதன் 9வது கண்காட்சியை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி வரும் 11ஆம் தேதி வரை, அதாவது 4 நாட்கள் நடைபெறும்.

மொபைல் காங்கிரஸ் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: “இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, அரசின் வரவேற்கும் அணுகுமுறை மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான கொள்கைகள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியாவை மாற்றியுள்ளன. இந்தியாவில் முதலீடு செய்யவும், உற்பத்தி செய்யவும் இதுவே சிறந்த நேரமாகும்.

சுதந்திர தினத்தில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இந்த ஆண்டு பெரிய மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் ஆண்டாக இருக்கும். சீர்திருத்தங்களின் வேகத்தை நாங்கள் அதிகரித்து வருகிறோம். இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலை ஒரு கோப்பை தேநீர் விலையை விட மலிவானது. இந்தியாவில் டிஜிட்டல் இணைப்பு இனி ஆடம்பரமல்ல; இது இப்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஒருங்கிணைந்த பகுதியாகியுள்ளது. இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது,” என அவர் கூறினார்.

1 More update

Next Story