ஜெகதீப் தன்கர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு தான் தெரியும், எனக்கு தெரியாது: மல்லிகார்ஜுன கார்கே


ஜெகதீப் தன்கர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு தான் தெரியும்,  எனக்கு தெரியாது:  மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 28 July 2025 12:15 AM IST (Updated: 28 July 2025 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? என்று எனக்கு எதுவும் தெரியாது எனவும் பிரதமர் மோடிக்குதான் தெரியும் எனவும் கார்கே கூறினார்.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் எப்போதும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

என்ன நடந்தது என்பதை அவர் தான் கூற வேண்டும். அதாவது ராஜினாமாவுக்கான காரணத்தை அவர் தான் தெரிவிக்க வேண்டும். மாநிலங்களவையில் நாங்கள் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள், சர்வதேச பிரச்சினைகள்,

வெளியுறவு கொள்கை குறித்து கேள்வி எழுப்பியபோது அதுகுறித்து விவாதிக்க அவர் அனுமதிக்கவே இல்லை. அவரது ராஜினாமாவுக்கான காரணம் ஜெகதீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் தான் தெரியும். அதுகுறித்து எங்களிடம் எந்த தகவல்களும் இல்லை. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றுவது குறித்து இப்போது பேச முடியாது. இதுகுறித்து பின்னர் பேசுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்

1 More update

Next Story