

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார்.
அதே சமயம் பக்வந்த் மன், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள அவர், தனது எம்.பி. பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.
முன்னதாக பக்வந்த மன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது பதவியேற்பு விழாவானது, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்கர் கலனில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி வரும் மார்ச் 16 ஆம் தேதி கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.