18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறைவு

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் சோதனை நிறைவடைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஐதராபாத்,

பெரியவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்தநிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3-ம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது.

இதையொட்டி பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா இலா கூறுகையில், பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3-ம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது. இந்த பரிசோதனையின்போது 1000 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடக்கிறது. அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிப்போம் என குறிப்பிட்டார்.

அடுத்த மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 5 கோடியை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார். நடப்பு செப்டம்பர் மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 3 கோடி டோஸ் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com