

புதுடெல்லி,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிகளின் ஏற்றுமதி மீண்டும் துவங்கியுள்ளது.
இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம் நீண்ட காலம் நிலுவையில் இருந்த ஏற்றுமதிக்கான முன்பதிவுகளை அனுப்பி வைக்கும் பணி துவங்கி உள்ளது.
அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி டோஸ் எண்ணிக்கை அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.