ராணுவத்துக்கு ஆகாஷ் ஏவுகணைகளை லெப்டினன்ட் ஜெனரல் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

அதிநவீன ஆகாஷ் ஏவுகணைகளை, 96 சதவீத உள்நாட்டுப் பொருட்களுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
ராணுவத்துக்கு ஆகாஷ் ஏவுகணைகளை லெப்டினன்ட் ஜெனரல் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
Published on

பலமுறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள், இந்த வகை ஏவுகணைகளில் மிக சிறந்ததாகக் கருதப்படுகின்றன. அதிகபட்சம் 20 கி.மீ. உயரத்தில் 25 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய திறன் பெற்றவையாக ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளன.

ஐதராபாத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ், இந்திய ராணுவத்துக்கும், விமானப் படைக்கும் இந்த ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.இந்நிலையில், ராணுவத்துக்கு வழங்கப்படும் ஆகாஷ் ஏவுகணைகளை அனுப்பிவைக்கும் நிகழ்வை ஐதராபாத் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.பி.சிங் நேற்று முன்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளிலும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com