2023-ல் 172 பயணங்களை மேற்கொண்ட பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் - மத்திய ரெயில்வே அமைச்சகம் தகவல்

இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு பாரத் கவுரவ் ரெயில்கள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ல் 172 பயணங்களை மேற்கொண்ட பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் - மத்திய ரெயில்வே அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் வழியாக 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் முக்கிய ஊர்கள், சுற்றுலா தலங்களை மக்கள் பார்க்க முடிகிறது. இதனால் சுற்றுலா ரெயில்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 'பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள்' 172 பயணங்களை மேற்கொண்டதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்களில் மொத்தம் 96,491 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணங்களின்போது இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு இந்த ரெயில்கள் பயணித்ததாகவும், இதற்காக பல்வேறு யாத்திரை தொகுப்புகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கான உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக உள்ளார்ந்த சேவைகளை பாரத் கவுரவ் ரெயில்கள் வழங்குவதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com