பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனி நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமானவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனியை தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று நியமனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனியை பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com