உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சித்ரவதை; பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்

ஒவ்வொரு முறையும் மாத்திரைகள் கொடுத்தபோது நான் எதிர்த்தேன் என்று ஜோதிசிங் கூறியுள்ளார்.
உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சித்ரவதை; பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்
Published on

லக்னோ,

பிரபல போஜ்புரி நடிகர் பவன்சிங் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட் டத்தை சேர்ந்த ஜோதிசிங் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் சமீபகாலமாக இந்த தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜோதிசிங் தனது கணவர் பவன்சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதுதொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

திருமணத்திற்கு பிறகு எனது கணவர் என்னை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தினார். குழந்தை வேண்டும் என்று ஏங்குவதாக அவர் கூறினார். ஆனால் அதற்கு மாறாக எனக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்தார்.

ஒவ்வொரு முறையும் மாத்திரைகள் கொடுத்தபோது நான் எதிர்த்தேன். ஆனால் அவர் என்னை மிகவும் சித்ரவதை செய்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு கூட 25 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். சம்பவத்தன்று மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு மயங்கினேன். ஆனாலும் இரவு வெகுநேரமாகிய பிறகே அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிசிங்கின் இந்த குற்றச்சாட்டுகளை பவன்சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,ஜோதிசிங் என்னை சந்திக்க லக்னோவுக்கு வருவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அவரது நோக்கங்களை நான் அறிந்திருந்தேன். நான் எவ்வாறு அவரிடம் நடந்து கொண்டேன் என்பது எனக்கும், அவருக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும் விவாகரத்து ந வடிக்கைகள் முடியும் வரை வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என ஜோதி மறுத்துவிட்டார். ஒரே வீட்டில் வசிக்கும்போது விவாகரத்து கேட்பது சரியா என அவரிடம் கேட்டேன். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com